1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 21 டிசம்பர் 2016 (18:21 IST)

இனிமேல் ஊதியத்தை பணமாக வாங்க முடியாது! - அவசரச் சட்டம்

தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கான ஊதியத்தை ரொக்கமாக வழங்குவதை தடை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


 

சில அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் கூட, தங்களது ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியம் அளிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இதனால், அவர்களுக்கு முறையான ஊதியம், வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் காப்புறுதி நிதி, போனஸ் ஆகியவை கிடைப்பதில்லை.

இந்நிலையில், நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியம் அளிப்பதை தடை செய்யும் அவசர சட்ட திருத்த மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காக கொண்டு வந்துள்ளது.

இதன்படி தொழில், வணிக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கான ஊதியத்தை மின்னணு முறையில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தவும், காசோலை மூலம் வழங்கவும் மட்டுமே முடியும்.

ஆனால், ஏற்கனவே பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பால், பொதுமக்கள் தினசரி தேவைகளுக்கு வங்கிகளில் நாள்கணக்கில் காத்திருக்கும் நிலையில், ஊதியமும் கைக்கு வராமல் செய்தால் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்று சிறு, குறு தொழிற்நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வருத்ததோடு தெரிவிக்கின்றனர்.