ரூ.2க்கு ரீசார்ஜ் செய்தால்... பி.எஸ்.என்.எல் அதிரடி அறிவிப்பு

bsnl
ரூ.2க்கு ரீசார்ஜ் செய்தால்... பி.எஸ்.என்.எல் அதிரடி அறிவிப்பு
Last Updated: வியாழன், 28 மே 2020 (19:50 IST)
இந்த கொரோனா வைரஸ் காலத்தில் பொதுமக்கள் அனைவரும் பொருளாதாரச் சிக்கலில் இருப்பதால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிஎஸ்என்எல் நிர்வாகம் ரூபாய் 19க்கு ஒரு பிளானை அறிமுகப்படுத்தியது

இந்த பிளான்படி ரூபாய் 19க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு வேலிடிட்டி நீட்டிப்பு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பிளான் தற்போது ரூபாய் 2க்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்படி ரூபாய் 2க்கு ரீசார்ஜ் செய்தால் வேலிடிட்டி காலம் முடிந்த பின்னரும் மூன்று நாட்கள் வரை நீடிப்பு வழங்கப்படும் என்றும் அந்த தொகையை வேலிடிட்டி தொடங்கிய முதல் நாளில் வாடிக்கையாளர்களின் மெயின் பேலன்ஸில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த பிளான் வேலிடிட்டி கால அவகாசம் நீடிப்புக்கு மட்டுமே என்றும் இந்த பிளானில் வேறு எந்த சலுகையும் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :