வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 15 அக்டோபர் 2015 (00:41 IST)

திருப்பதி ரயில் நிலையத்தில் 8 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்

திருப்பதி ரயில் நிலையத்திற்கு மர்ம நபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
திருப்பதி ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம மனிதர், திருப்பதி ரயில் நிலையத்தில் 8 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி தொடர்ப்பை துண்டித்தார். இதை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த ரயில்வே அதிகாரி, உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, மற்றும் ரயில்வே போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் ரயில் நிலையம் முழுவதையும் மோப்ப நாய்களுடன் சோதனை செய்தனர். பயணிகளின் உடைமைகளையும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன்  சோதனை செய்தனர். ஆனால், இதுவரை வெடிகுண்டுகள் கிடைக்கவில்லை.
 
மேலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை சீர்குலைக்க சதி நடைபெறுகிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.