வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 2 மே 2016 (11:13 IST)

மேற்கு வங்கத்தில் பயங்கர குண்டு வெடிப்பு: 4 பேர் பலி

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் வீடு ஒன்றில் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த போது, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.


 
 
படுகாயம் அடைந்தவர்களில் 4 பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு சரியாக நேற்றிரவு 11.30 நிகழ்ந்துள்ளது.
 
குண்டு தயாரித்தவர்கள் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களா அல்லது கூலிப்படையினரா என்பது குறித்த தகவல்களை காவல்துறை ரகசியமாக வைத்துள்ளது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பில் இறந்த 4 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது.
 
மேற்குவங்கத்தில் கடந்த சனிக்கிழமை 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குப்பதிவில் நடந்த வன்முறை காரணமாக 186 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பில் அரசியல் கட்சி சம்பந்தப்பட்டிருப்பதால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.