புதன், 12 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 செப்டம்பர் 2025 (16:03 IST)

பாஜகவுக்கு வாக்களித்தால் கேரளத்தின் கலாசாரம் அழிந்துவிடும்: பினராயி விஜயன்

பாஜகவுக்கு வாக்களித்தால் கேரளத்தின் கலாசாரம் அழிந்துவிடும்: பினராயி விஜயன்
பாஜகவுக்கு வாக்களிப்பது கேரளத்தின் கலாச்சாரத்தை அழித்துவிடும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார். 
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் கேரளாவுக்கு வந்தபோது, "வரும் உள்ளாட்சித் தேர்தலில் 25 சதவீத வாக்குகளையும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியையும் கைப்பற்றுவதுதான் பாஜகவின் இலக்கு" என்று கூறினார். அமித் ஷாவின் இந்த அறிக்கையை சுட்டிக்காட்டிப் பேசிய முதல்வர் பினராயி விஜயன், "இந்த அறிக்கை, பாஜகவின் முக்கிய இலக்கு கேரளம் என்பதைத் தெளிவாக காட்டுகிறது," என்று குறிப்பிட்டார்.
 
பாஜகவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் கேரளத்தின் கலாச்சாரத்தை அழித்துவிடும் என்றும், இந்த உணர்வு மக்களிடையே எப்போதும் இருக்க வேண்டும் என்றும் பினராயி விஜயன் வலியுறுத்தினார்.
 
"நாம் கொண்டாடும் முக்கியப் பண்டிகையான ஓணம் விழாவைக்கூட அவர்கள் மாற்ற விரும்புகிறார்கள். இன்று நாம் அனுபவிக்கும் அனைத்தையும் மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள். பாஜகவின் இந்த தாக்கங்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். " என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
 
 
Edited by Mahendran