வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 ஜூன் 2024 (09:54 IST)

அருணாச்சல் பிரதேசத்தில் ஆட்சியை பிடித்தது பாஜக.. சிக்கிமில் மாநில கட்சிக்கு வெற்றி..!

அருணாச்சலப்பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்கு வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா என்ற கட்சி ஆட்சியை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவைப்படும் நிலையில், 40 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. ஏற்கனவே இம்மாநிலத்தில் 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சிக்கிம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 17 இடங்கள் தேவைப்படும் நிலையில், 31 தொகுதிகளில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா என்ற கட்சி முன்னிலை வகிக்கிறது. எனவே சிக்கிம் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva