40 ஆயிரம் கோடியை காப்பாற்றவே இந்த நாடகம்! – பாஜக தலைவர் விட்ட கதை!

Prasanth Karthick| Last Modified திங்கள், 2 டிசம்பர் 2019 (17:26 IST)
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றதே 40 ஆயிரம் கோடியை காப்பாற்றதான் என பாஜக மூத்த தலைவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் அனந்த்குமார் ஹெக்டே மத்திய அரசின் 40 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட நிதி தொகை தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பில் இருந்ததாகவும், தற்போது பதவியேற்க இருக்கும் சிவசேனா கூட்டணி அந்த பணத்தை எடுத்து வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிடாமல் தவறாக பயன்படுத்த நேரிடும் என்பதாலேயே பட்னாவிஸ் அவசரமாக பதவியேற்றார் என்றும், தற்போது அந்த பணம் பாதுகாக்கப்பட்டு விட்டதாகவும், அதற்காகவே இந்த 4 நாள் முதல்வர் நாடகம் என்றும் பேசியுள்ளார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பதிலளித்துள்ள தேவேந்திர பட்னாவிஸ் அப்படி எதுவும் நடக்கவில்லை, அனந்த்குமார் ஹெக்டேவின் இந்த கருத்து முற்றிலும் தவறானது என மறுப்பு தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :