வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 11 மே 2015 (17:19 IST)

இந்திரா காந்தியை கொலை செய்தவர்கள் தியாகிகளா? - பாஜக கண்டனம்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கொலை செய்தவர்களை தியாகிகள் என்று கூறிய அகாலி தளத்திற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
 
இந்திரா காந்தி தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணி சீக்கியர்களின் புனித தளமான பொற்கோயிலுக்குள் இராவணுத்தை நுழைய அனுமதித்தார். இதனால் சீக்க்கியர்கள் கடும்கோபம் அடைந்தனர். மேலும், 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் நாள் சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
 

 
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக் கிழமை [10.05.15] சண்டிகரில் நடைபெற்ற விழாவில் பஞ்சாப் சட்டப்பேரவை தலைமை செயலாளர் பிர்சா சிங் பேசுகையில், ’முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கொலை செய்தவர்களை தியாகிகள்’ என்று பாராட்டி பேசியுள்ளார். இதற்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
 
இது குறித்து பாஜக மூத்த தலைவர் லட்சுமி காந்த் சாவ்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ’முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டு கொன்றவர்களை தியாகிகள் என்று கூறுவது மிகவும் வருந்தத்தக்க விஷயம். அவருடைய பேச்சு தேச விரோத சக்திகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்து விடும்.
 
இந்த விவகாரத்தில் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் விளக்கம் அளிக்க வேண்டும். சட்ட மன்ற செயலாளரின் இந்த விளக்கம் மிகவும் துரதிருஷ்டவசமானது. அகாலி தள கட்சி தலைவர் என்ற வகையில் சுக்பீர் சிங் பாதலும் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 
பஞ்சாபில் ஆளும் அகாலி தள கட்சியும், பாஜகவும் ஒரே கூட்டணியில் இருக்கின்றது. இந்நிலையில் பாஜக அகாலி தளத்திற்கு கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.