செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (17:24 IST)

பினாமி தடுப்பு சட்டம்: மத்திய அரசு விரைவில் கொண்டுவருகிறது

பினாமி சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான புதிய சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
 
இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூர்வமாக கூறியிருப்பதாவது:
 
பினாமி சொத்துகள் தொடர்பாக புதிய சட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, அந்த சொத்துகளை பறிமுதல் செய்யவும், விசாரணைக்கு உத்தரவிடவும் முடியும். இதனால் பினாமி சொத்துகளின் பெயரில், கருப்புப் பணம் பதுக்கப்படுவது தடுக்கப்படும். மேலும், சொத்துரிமைச் சட்டத்தை திருத்தவோ அல்லது வருமான வரிச் சட்டத்தில் மேலும் ஒரு விதியை இணைக்கவோ பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.