1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 13 ஜூலை 2016 (11:34 IST)

இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2,36,000 ஆக உயர்வு: ஆய்வு தகவல்

இந்தியாவில் மொத்தம் 2,36,000 கோடீஸ்வரர்கள் இருப்பதாக நியூ வேர்ல்டு வெல்த் நிறுவனம் ‘இந்தியா 2016 வெல்த் ரிப்போர்ட்’ என்ற அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.


  
நியூ வேர்ல்டு வெல்த் நிறுவனம் ‘இந்தியா 2016 வெல்த் ரிப்போர்ட்’  என்ற அறிக்கையை வெளிட்டுள்ளது. அதில் 2007ஆம் ஆண்டு மொத்தம் 1,52,000 கோடீஸ்வரர்கள் இருந்ததாகவும், தற்போது 55 சதவீதம் அதிகரித்து 2,36,000 கோடீஸ்வரர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 1.5 லட்சம் டாலர் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் 2025ஆம் ஆண்டில் 135 சதவீதம் வரை அதிகரித்து, கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 5,54,000 ஆக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.
 
நிதிச் சேவைகள், தகவல் தொழில்நுட்பம், வெளிப்பணி ஒப்படைப்பு, ஹெல்த்கேர் துறைகள், நிலையான பொருளாதார வளர்ச்சி, போன்ற துறைகளில் இந்தியா செயல்பட்டது, தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது, போன்ற காரணங்கள் தான் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.