தொடர்புடைய செய்திகள்
- மம்தா பானர்ஜி கட்சியில் இன்னொரு விக்கெட்.. கட்சியில் இருந்து விலகிய சுஷ்மிதா தேவ்..
- யூசுப் பதானை எம்பி பதவியிலிருந்து விலக கூறினாரா சவுரவ் கங்குலி? மம்தா பானர்ஜி தூண்டுதலா?
- மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வர் சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு! 2 துணைமுதல்வர்கள்?
- சட்டப்பேரவையை கலைத்து ஆளுனர் ஆர்.என்.ரவி உத்தரவு.. பெரும் பரபரப்பு..!
- மம்தா பானர்ஜியின் Fake News Factory உருவாக்கிய வதந்தி.. ஜனாதிபதி குறித்த வதந்திக்கு பாஜக பதிலடி..!
திமுகவை கூட்டணி கட்சிகள் கைவிட்டன.. மம்தாவை சொந்த கட்சியே கைவிட்டதா? தொடர்ந்து விலகும் பிரபலங்கள்...
மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தற்போது வரலாறு காணாத உட்கட்சி பூசல் வெடித்துள்ள சூழலில், அக்கட்சியின் முக்கிய குரலாக விளங்கிய ஜாதவ்பூர் எம்பி சாயோனி கோஷ் திடீரென அதிருப்தியாளர் முகாமிற்கு மாறியுள்ளார். மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவராகவும், கட்சியின் இளைஞரணி தலைவராகவும் இருந்த சாயோனியின் இந்த அதிரடி முடிவு திரிணாமுல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு, திரிணாமுல் காங்கிரஸின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நாடாளுமன்றத்தில் தனி பிரிவாக செயல்பட முயன்று வருகின்றனர். லோக்சபா எம்பி ககோலி கோஷ் தஸ்திதார் தலைமையில் இந்த அதிருப்தி எம்பிக்கள் குழு, மத்தியில் ஆளும் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவளிக்க முன்வந்து சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்த அதிருப்தி ஆவணங்களில் எம்பி சாயோனி கோஷும் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களுடன் மம்தாவின் நம்பிக்கைக்குரிய மற்றொரு எம்பியான மாலா ராயும் டெல்லியில் உள்ள இந்த அதிருப்தியாளர்கள் முகாமில் இணைந்துள்ளார்.
இதுவரை பாஜக மற்றும் என்டிஏ கூட்டணியை கடுமையாக விமரிசித்து வந்த சாயோனி கோஷ், 'தீதி வென்றால் பெங்கால் வெல்லும்' என்று மம்தாவுக்கு ஆதரவாக முழக்கமிட்டவர். மம்தாவை விட்டு விலக மாட்டேன் என்று உறுதியளித்த சாயோனி, தற்போது மம்தா பானர்ஜிக்கு எதிராக திரும்பியிருப்பது திரிணாமுல் காங்கிரஸுக்கு நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
