வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva

4 கார்களில் மாறி மாறி பாலியல் பலாத்காரம்.. 11ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்..!

4 கார்களில் மாறி மாறி பாலியல் பலாத்காரம்.. 11ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்..!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பிளாக்மெயில் செய்யப்பட்டு, நான்கு வெவ்வேறு வாகனங்களில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அவ்சாஃப் அலி கான் மற்றும் அவனது கூட்டாளியான ஜிம் உரிமையாளர் மஜ் கான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியை காரில் வைத்து வன்கொடுமை செய்தபோது, அதனை ரகசியமாக வீடியோ எடுத்த மஜ் கான், அந்த வீடியோவை காட்டி மிரட்டி மாணவியிடம் இருந்து ரூ.40,000 பறித்துள்ளார்.
 
மேலும், அந்த வீடியோவை பயன்படுத்தி பலமுறை அப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இந்த செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட தார் உள்ளிட்ட நான்கு கார்களை ஏசிபி அங்கிதா கத்ரகர் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு பறிமுதல் செய்துள்ளது. 
 
இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தகவல் கசியவிட்டதாக கோஹேஃபிசா காவல் நிலைய தலைமைக்காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஐபோனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் போபாலில் பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva