அம்மாவின் அந்தரங்க புகைப்படங்களை காதலருக்கு அனுப்பிய மகள்.. வினையாக முடிந்த விபரீத விளையாட்டு..!
பெங்களூருவில் தனது 23 வயது மகள் மற்றும் அவரது கணவர் மீது தாய் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படிப்பிற்காக பெற்றோரிடம் செல்போன் வாங்கிய மகள், தனது தாயார் மற்றும் உறவுக்கார பெண் ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை அவர்களுக்கு தெரியாமலேயே ரகசியமாக எடுத்துள்ளார். பின்னர் அந்த புகைப்படங்களை தனது காதலருக்கு பகிர்ந்துள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் அந்த மகளுக்கும், புகைப்படங்களைப் பெற்று கொண்ட நபருக்கும் திருமணம் நடந்துள்ளது. தற்செயலாக மகளின் செல்போனை சோதித்த தாயார், அதில் இருந்த புகைப்படங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையை அணுகியுள்ளார்.
புகாரை தொடர்ந்து, சம்மந்தப்பட்ட மகள் மற்றும் அவரது கணவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரது செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான இந்த அந்தரங்க புகைப்பட விவகாரம் அப்பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தடயவியல் அறிக்கை வந்த பின்னரே முழுமையான உண்மைகள் தெரியவரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Siva