பள்ளியில் மாணவி சுட்டுக் கொலை: பெங்களூருவில் பயங்கரம்!

வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified புதன், 1 ஏப்ரல் 2015 (12:52 IST)
பள்ளியிலேயே மாணவி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் வேலை செய்த ஒருவரே மாணவியை சுட்டுக் கொன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 
பெங்களூருவில் உள்ள தனியார் உண்டு உறைவிடப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு பிரீ யுனிவர்சிட்டி பயின்று வந்த 18 வயதுடைய மாணவியை அங்கு பணிபுரியும் ஒருவரே சுட்டுக் கொன்றுள்ளார்.
 
நேற்றிரவு இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
காதல் பிரச்சனையால் இந்த சம்பவம் நடந்திருக்கலாமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
சம்பவம் குறித்து தகவலறிந்த மாநில உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி ஆகியோர் பள்ளிக்கு நேரடியாக சென்றனர். சம்பவ இடத்தில் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.


இதில் மேலும் படிக்கவும் :