வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 11 நவம்பர் 2016 (12:56 IST)

சனி, ஞாயிறு வங்கிகள் திறப்பு; காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்

சனி, ஞாயிறு வங்கிகள் திறப்பு; காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்

செல்லாது என்று அறிவிக்கபட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு உதவியாக, வங்கிகளின் வேலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


 

 
பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். அதேபோல், புதிய 100, 500, 2000 நோட்டுகள் மக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள், பழைய நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளாலம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இதன் பொருட்டு, கடந்த 9ம் தேதி வங்கிகள் செயல்படவில்லை. அதேபோல், ஏ.டி.எம்-ல் உள்ள பழைய நோட்டுகளை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை வைப்பதற்காக, கடந்த 9 மற்றும் 10 ந் தேதிகளில் ஏ.டி.எம் மையங்கள் செயல்படவில்லை.
 
நேற்று முதல், மக்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை, வங்கிகளுக்கு சென்று மாற்றி, புதிய நோட்டுகளாக பெற்று வருகின்றனர். இந்தியா முழுவதும் ஏராளமானோர் ஒரே நேரத்தில் குவிந்ததால், வங்கிகள் ஸ்தம்பித்தன.
 
எனவே, இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கம் போல் வங்கிகள் செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதுமக்களுக்கு கூடுதல் வசதியாக வங்கிகள் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணி மட்டுமில்லாமல், காசோலை பரிமாற்றம், பணம் செலுத்துவது என வழக்கமான அனைத்து வங்கி சேவைகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.