டிசம்பர் 2 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்


Suresh| Last Updated: செவ்வாய், 27 அக்டோபர் 2015 (15:04 IST)
வங்கி ஊழியர்கள் டிசம்பர் 2ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுப்படப் போவதாக அறிவித்துள்ளனர்.

 
 
இது குறித்து அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாசலம் கூறுகையில், "பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்துள்ள துணை வங்கிகளை தனியாக நீக்குவது உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்கக் கோரியும், அரசு வழிகாட்டுதலின்படி கருணை அடிப்படையில் செய்யப்படும் பணி நியமனங்களை நீட்டிக்கக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
 
இந்நிலையில், அரசுத்துறை வங்கி ஊழியர் சங்கம் சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை ஏற்க மறுத்தால், அரசுத்துறை வங்கி ஊழியர் சங்கமும் 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அதன் தலைவர் மகேஷ் மிஸ்ராவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :