விடுதி மாணவிகள் குளிப்பதைப் படமெடுத்து பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர்

Suresh| Last Updated: புதன், 23 ஜூலை 2014 (12:03 IST)
பெங்களூரில் பள்ளி முதல்வர் விடுதி மாணவிகள் குளிப்பதைப் படமெடுத்ததுடன் அந்த மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பெங்களூர் அருகே உள்ள அனேக்கல் பகுதியிலுள்ள பள்ளியின் முதல்வர் ஒருவர் அப்பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளி வளாகத்திலேயே மது அருந்தியதுடன் கிட்டத்தட்ட 30 பெண்களுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்திருப்பது தெரியவந்தது.

குடி போதையில் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துள்ளார். 52 வயதான மல்லிகார்ஜுன் கார்கே என்ற அந்த காமுகனின் வெறிச் செயல்கள், குழந்தைகள் நல ஆணைய குழுவினர் பள்ளி மாணவிகளிடம் நடத்திய விசாரணையின் மூலம் தெரியவந்தது.

விடுதியில் உள்ள குறியலறைக் கதவுகளின் தாழ்ப்பாள்களைக் கழற்றியதுடன், மாணவிகள் குளிப்பதையும் புகைப்படம் எடுத்து ரசித்துள்ளார்.

பள்ளி வளாகத்தில் மது அருந்தியதை அம்மாநிலத்தில் உள்ள தொலைக்காட்சிகள் ஒளி பரப்பியதையடுத்து கடந்த மாதம் இவர் கைது செய்யப்பட்டார்.

குறிப்பாக 15 வயது மாணவி ஒருவருக்கு கார்கே தொடர்ந்து பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக பெண்கள் ஆணைய உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை அந்த 15 வயதுடைய மாணவி நீதிபதியிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார். அதில் தன்னிடமும் மற்ற மாணவிகளிடமும் தகாத முறையில் நடந்ததுடன் உடலில் பல பாகங்களில் கை வைத்ததையும் அந்த மாணவி வேதனையுடன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :