பெங்களூரில் சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 உடற்பயிற்சி ஆசிரியர்கள் கைது

வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified செவ்வாய், 29 ஜூலை 2014 (15:56 IST)
பெங்களூர் கற்பழிப்பு வழக்கில் மேலும் 2 உடற்பயிற்சி ஆசிரியர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் உள்ள பிரபல பள்ளியில் 6 வயது மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பெண்ணின் பெற்றோர் உள்பட பலர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூர் நகர காவல் ஆணையரை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து மாணவியை கற்பழித்ததாக ஸ்கேட்டிங் பயிற்சியாளர் முஸ்தபா என்ற முன்னாவை காவல்துறையினர் கடந்த வாரம் கைது செய்தனர்.
அம்மாநில அரசுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் தொடர்புடைய இரு உடற்பயிற்சி ஆசிரியர்களை இன்று காவல்துறையினர் கைது செய்தனர். தங்களுக்கு கிடைத்த உறுதியான ஆதாரங்களை வைத்து இவர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறையினருக்கு கிடைத்துள்ள வீடியோ காட்சிகளில் மூவரில் ஒருவர் சிறுமியை கற்பழித்தது தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :