வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 23 ஜூலை 2014 (12:28 IST)

பெங்களூர் சிறுமி பலாத்கார வழக்கு: பள்ளியின் நிறுவனர் கைது

பெங்களூரில் உள்ள மாரத்தள்ளி பகுதியில் இருக்கும் 'விப்ஜியார்' தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பள்ளி நிறுவனர் ருஸ்தம் கரவள்ளா கைது செய்யப்பட்டார்.
 
பெங்களூரில் உள்ள மாரத்தள்ளி பகுதியில் இருக்கும் 'விப்ஜியார்' தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி, கடந்த 2 ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
 
இது குறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் கடந்த 15 ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இவ்வழக்கில், அப்பள்ளியின் ஸ்கேட்டிங் பயிற்றுநர் முஸ்தபா (எ) முன்னா (30) கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
 
கைதாகி இருக்கும் அவர், ஏற்கெனவே இரு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் என தற்போது தெரிய வந்துள்ளது. ஸ்கேட்டிங் பயிற்றுநர் முஸ்தபாவை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முஸ்தபாவை காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் இன்று பள்ளி நிறுவனர் ருஸ்தம் கரவள்ளாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இதற்கிடையே 'விப்ஜியார்' பள்ளி நிர்வாகம் குற்றவாளியை பாதுகாக்க சதி செய்ததாக வர்த்தூர் காவல்துறையினர், பள்ளியின் நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
ஏற்கெனவே விப்ஜியார் பள்ளியின் ஒழுங்கீனத்தை காரணம் காட்டி, அதன் உரிமத்தை ரத்து செய்யும்படி டெல்லியில் உள்ள ஐ.சி.எஸ்.இ. (கல்வித்துறை) தலைமையகத்திற்கு கர்நாடக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.