வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2015 (05:38 IST)

பீகாரில் உள்நாட்டு மதுபான விற்பனைக்கு தடை : நிதிஷ்குமார் அறிவிப்பு

உள்நாட்டு மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக, பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் மொபெரும் வெற்றி பெற்று முதல்வரானார் நிதிஷ்குமார், தேர்தல் முன்பு, 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார். 
 
பீகார் மாநில அமைச்சரவைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அதில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த புதிய கொள்கைக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், உள்நாட்டு மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. பின்பு, வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
 
பீகாரில் அரசின் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ4,000 கோடி லாபம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.