ஞாயிறு, 8 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (17:33 IST)

3 குழந்தைகள் உள்பட 7 பேர் கொலை.. பெண்ணுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

3 குழந்தைகள் உள்பட 7 பேர் கொலை.. பெண்ணுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!
மூன்று குழந்தைகள் உட்பட ஏழு உறவினர்களை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவருக்கு பம்பாய் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
 
கடந்த 2023-ஆம் ஆண்டு புனேவில் உள்ள பீமா ஆற்றில் ஏழு உடல்கள் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இந்த கொலைகளுக்கு காந்தாபாய் ஜாதவ் என்ற பெண் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
 
இந்த நிலையில், அவருக்கு எதிரான நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், சூழ்நிலை ஆதாரங்களும் அவரை நேரடியாக குற்றத்துடன் தொடர்புபடுத்தவில்லை என்றும் கூறி பம்பாய் உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
 
குற்றவாளிக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அவரை காலவரையின்றி தடுப்புக் காவலில் வைக்க முடியாது என்றும், மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பெண் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும் நீதிபதி கௌரி கோட்சே தெரிவித்தார்.
 
Edited by Siva