Sugapriya Prakash|
Last Modified வியாழன், 13 பிப்ரவரி 2020 (16:54 IST)
டெல்லி தேர்தலின் போது கெஜ்ரிவால் போல வேடமிட்டு கலக்கிய குட்டி பையனுக்கு ஆம் ஆத்மி அழைப்புவிடுத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஒரு தேர்தலில் வெற்றி பெற்று மாநில முதல்வராக பதவியேற்கும் போது அண்டை மாநில முதல்வர்களை பதவியேற்பு விழாவுக்கு அழைப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள முதல்வர் அரவிந்த் கேஜரிவால், வரும் 16 ஆம் தேதி ராம்லீலா மைதானத்தின் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவிற்கு இந்தியாவின் முக்கிய தலைவர்கள் அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் டெல்லி மக்களுக்கு மட்டுமே அழைப்பு என்றும் மற்ற மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என்றும் ஆத்மி கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதனிடையே ஆச்சர்யமளிக்கும் விதமாக டெல்லி தேர்தலின் போது கெஜ்ரிவால் போல வேடமிட்டு கலக்கிய குட்டி பையனுக்கு கெஜ்ரிவால் பதவியேற்பு ஆம் ஆத்மி அழைப்புவிடுத்துள்ளது. இதனை ஆம் ஆத்மி டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.