வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 13 ஆகஸ்ட் 2016 (11:36 IST)

‘டாப் 100’ கோடீஸ்வரர்களில் 2 இந்தியர்கள் யார் தெரியுமா?

அமெரிக்க வணிக பத்திரிகையான போர்ப்ஸ், சர்வதேச அளவில் ஐ.டி. துறையைச் சேர்ந்த 100 கோடீஸ்வரர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
 

 
அதில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 7,800 கோடி டாலர் சொத்துடன் முதலிடத்தில் உள்ளார். அமேசான் நிறுவனத் தலைவர், ஜெப் பிசோஸ் 6,620 கோடி டாலர்களுடன் இரண்டாமிடத்திலும், பேஸ்புக் தலைவரும் மார்க் ஜூகர்பெர்க் 3-வது இடத்திலும் உள்ளனர்.
 
இந்த பட்டியலில், இந்திய நிறுவனமான விப்ரோவின் தலைவர் அசிம் பிரேம்ஜி 1,600 கோடி டாலர் நிகர சொத்துடன் 13-வது இடத்தையும், எச்.சி.எல். நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் 1,160 கோடி டாலர் சொத்துடன் 17-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
 
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 100 பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். அதிலும் முதல் 10 பேரில் 8 பேர் அமெரிக்கர்கள்.