வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 11 ஜூலை 2015 (05:51 IST)

ஆகஸ்ட் 7 ஆம் தேதி: தேசிய கைத்தறி தினம்

ஆகஸ்ட் 7ஆம் தேதியை தேசிய கைத்தறி தினமாக பிரதமர் நரேந்திரமோடி அறிவிக்க உள்ளார்.
 

 
இது குறித்து டெல்லியில் உள்ள மூத்த கைத்தறித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
 
ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியை தேசிய கைத்தறி தினமாக அறிவிக்க வகை செய்யும் முன்மொழிவுக்காக மத்திய அரசின் செயலாளர்கள் அடங்கிய குழு ஒப்புதல் அளித்தது. இது தொடர்பான முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார். இந்திய கைத்தறி (பிராண்ட்) என்ற வியாபார குறியீட்டையும் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்த உள்ளார்.
 
இதை உறுதிபடுத்தும் விதமாக, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார், பிரதமர் மோடிக்கு சமீபத்தில் அனுப்பிய கடிதத்தில், முதல் சர்வதேச கைத்தறிதினத்தை சமூகத்தில் அந்தஸ்து மிக்க நபர்களுடனும், சிறந்த கைத்தறி நெசவாளர்களுடனும் கொண்டாட ஜவுளித் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. எனவே, எங்களது அழைப்பை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் தாங்கள் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என விரும்புகிறோம் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.