காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் கெஜ்ரிவால் பேரம் பேசும் ஆடியோவால் பரபரப்பு

kejriwal
Ilavarasan| Last Updated: புதன், 11 மார்ச் 2015 (17:00 IST)
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஆம் ஆத்மி பக்கம் இழுத்து ஆட்சி அமைக்க, அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களிடம் பேரம் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆம் ஆத்மியில் இருந்து காங்கிரஸில் இணைந்த ராஜேஷ் கார்க், தன்னிடம் அரவிந்த் கேஜ்ரிவால் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை ரகசியமாக பதிவு செய்து அந்த ஆடியோ பதிவை தற்போது வெளியிட்டுள்ளார்.

லஞ்சம் வாங்குவதையும், கொடுப்பதையும் வீடியோ பதிவு செய்து புகார் செய்யலாம் என்று அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருந்த நிலையில், தற்போது அவரது பேச்சே ரகசியமாக பதிவு செய்யப்பட்டு வெளியாகியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது உண்மையல்ல என்றும், போலியாக தயாரிக்கப்பட்டது என்றும் ஆம் ஆத்மி கூறி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :