ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சசி தரூரின் பேச்சுக்கு பிரமதர் நரேந்திர மோடி பாராட்டு


K.N.Vadivel| Last Updated: வெள்ளி, 24 ஜூலை 2015 (00:47 IST)
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சசி தரூர் பேச்சுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

 

நாடாளுமன்ற கட்டிடத்தில் எம்.பி.க்களுக்கான புதிய நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
 
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் காலனியாதிக்கம் பற்றி சசி தரூரின் பேச்சு தற்போது யூடியூபில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நாட்டுப்பற்றுடைய இந்தியர்களின் உணர்வுகளுடன் சசிதரூரின் பேச்சு ஒன்றிப்போயுள்ளது. சரியான விஷயங்களைச் சரியான இடத்தில் திறமையான வாதங்களை முன்வைதுள்ளார் என பாராட்டியுள்ளார்.
 
அப்போது, முன் வரிசையில் அமர்ந்திருந்த சசி தரூர், பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டை கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.
 
காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் எல்லாம் மோடியை கடும் விமர்ச்சனம் செய்யும் போது, பிரதமர் மோடியை தருணம் கிடைக்கும் போது எல்லாம் சசி தரூர் பாராட்டினார். தற்போது, சசி தரூரை, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். 
 


இதில் மேலும் படிக்கவும் :