வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 11 ஆகஸ்ட் 2015 (06:22 IST)

ஐதராபாத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிலை திறப்பு

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சிலை ஐதராபாத்தில் திறந்து வைக்கப்பட்டது.
 

 
ஐதராபாத்தில், இமராத் ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. இந்த மையத்தின் குடியிருப்பு வளாகத்தில், இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் வெண்கல சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அப்துல் கலாம் சிலை வடிவமைக்கப்பட்டது.
 
இதனையடுத்து, அப்துல் கலாம் சிலையை ராணுவ அமைச்சர் அறிவியல் ஆலோசகர் ஜி.சதீஷ் ரெட்டி திறந்துவைத்தார். இந்த விழாவில், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் மற்றும் விஞ்ஞானிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
இமராத் ஆராய்ச்சி மையம், இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமால் தோற்றுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.