1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Another Blow to Mamata Banerjee: Trinamool Rajya Sabha MP Sushmita Dev Resigns From Party

மம்தா பானர்ஜி கட்சியில் இன்னொரு விக்கெட்.. கட்சியில் இருந்து விலகிய சுஷ்மிதா தேவ்..

மம்தா பானர்ஜி பின்னடைவு
மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழந்த திரிணாமுல் காங்கிரஸ்  கட்சியில் இருந்து அதன் மாநிலங்களவை எம்பி சுஷ்மிதா தேவ் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.  மம்தா பானர்ஜியின் தலைமைக்கு இந்த ராஜினாமா மற்றுமொரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 
 
அண்மைக்காலமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்பிக்கள் அடுத்தடுத்து விலகி வரும் வேளையில், சுஷ்மிதா தேவின் இந்த அதிரடி முடிவு தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அசாம் மாநிலத்தை சேர்ந்த சுஷ்மிதா தேவ், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தவர். மம்தா பானர்ஜியால் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அவர், வடகிழக்கு மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் முக்கியப் பொறுப்புகளில் செயல்பட்டு வந்தார். 
 
இந்நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தான் விலகுவதாக மம்தா பானர்ஜிக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். தனது விலகலுக்கான தெளிவான காரணங்களை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், கட்சித் தலைமை மீதான அதிருப்தியே இதற்குக் காரணம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
மம்தா பானர்ஜியின் தேசிய அளவிலான அரசியல் நகர்வுகளுக்கு இந்த விக்கெட் வீழ்ச்சி பெரும் பலவீனத்தை ஏற்படுத்தக்கூடும் என விமரிசிக்கப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பாரதிராஜாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்!.. வைரல் போட்டோஸ்!..