வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2015 (23:09 IST)

எனது கடிதத்திற்கு இது வரை தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் கிடைவில்லை: வைகோ விரக்தி

ஆந்திர மாநிலம், திருப்பதி சேசாசலம் வனப்பகுதியில், 20 அப்பாவி தமிழர்கள் படுகொலை குறித்து பேச, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க, கடிதம் கொடுத்து 15 நாட்களாகியும், இதுவரை எந்த பதிலும் கிடைக்கிவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
ஆந்திர மாநிலம், திருப்பதி சேசாசலம் வனப்பகுதியில், ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று எந்த சட்ட விரோதச் செயலிலும் ஈடுபடாத 20 அப்பாவி ஏழைத் தமிழர்களை ஆந்திர மாநில வனத்துறை சிறப்புக் காவல் படையினர் மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்து சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
 
ஆந்திர உயர் நீதிமன்றத்தில், 20 தமிழர்கள் படுகொலை மீதான வழக்கில் தமிழக அரசு தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
கடந்த ஜூலை 15ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து இது குறித்து கோரிக்கை மனு அளிக்க ஜூலை 15ஆம் தேதி அன்று தமிழக முதமைச்சர் அலுவலகத்துக்குக் நான் கடிதம் அனுப்பி இருந்தேன். ஆனால், நான் மனு அனுப்பி 15 நாட்கள் ஆகியும் இது வரை தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் கிடைவில்லை.
 
ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை நடைபெற்று இன்றோடு 114 நாட்கள் முடிடந்துவிட்டநிலையில், குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தி தண்டிக்கச் செய்யவும், நீதியை நிலைநாட்டவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகையைப் பெற்றுத் தரவும் முடிவு செய்துள்ளோம்.
 
இதற்கான ஆலோசனைக் கூட்டம், ஆகஸ்ட் 4 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு தாயகத்தில் நடைபெறும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் கலந்து கொள்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.