1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. andhra anatpur saint jumped from hills and died

எனக்கு பறக்கும் சக்தி உண்டு!.. கீழே குதித்த பூசாரி மரணம்!.. அதிர்ச்சி வீடியோ!..

andhra saint
சில போலி பூசாரிகளும், சாமியார்களும் பக்தர்கள் தங்களை நம்ப வேண்டும் என்பதற்காக தங்களை அதீத சக்தி கொண்ட ஒருவராக காட்டிக் கொள்வார்கள். தங்களுக்கு கடவுளின் அணுகூலன்கள் உண்டு.. தங்களை கடவுள் எப்போதும் கைவிட மாட்டார் என சொல்வ்வார்கள். அதில் சிலர் ‘நானே கடவுள்’ என்று சொல்வதும் உண்டு.

அதுபோன்ற போலி சாமியார்கள் பக்தர்களும் நம்புவதுண்டு. பக்தர்களின் நம்பிக்கையை பயன்படுத்தி பல போலி சாமியார்கள் போலி ஆசிரமங்களை துவங்கு சுக போக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.இந்நிலையில்தான் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கம்ப மல்லையா சுவாமி கோயிலில் பாரம்பரிய பூஜைகளை நடத்திக் கொண்டிருக்கும் பாப்பையா(49) என்கிற பூசாரி மலை உச்சியிலிருந்து கீழே குதித்ததில் உயிரை இழந்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாகவே அந்த பகுதி மக்களிடம் ‘எனக்கு தெய்வீக சக்தி வந்து விட்டது.. என்னால் பறக்க முடியும். என்று அவர் சொல்லி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அதை நான் செய்து காட்டுகிறேன் என சொல்லி கடவுளுக்கு பூஜைகள் செய்துவிட்டு அவர் அந்த மலையில் இருந்து கீழே குதித்தார். அப்போது அவர் மரணம் அடைந்துவிட்டார். சிலரோ ‘அவர் கால் தவறியே கீழே விழுந்தார்’ என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், வீடியோவை பார்த்தால் பூசாரி சொந்த விருப்பத்தில் குதிப்பது நன்றாகவே தெரிகிறது என பலரும் சொல்கிறார்கள்.

அடுத்த கட்டுரையில்
அயோத்தி நன்கொடை முறையீடு!.. யாரும் வாதாடக்கூடாது!. மீறினால் அபராதம்!...