செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (18:03 IST)

காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய ஓட்டு வங்கி ஊடுருவல்காரர்கள் தான்.. அமித்ஷா கடும் குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய ஓட்டு வங்கி ஊடுருவல்காரர்கள் தான்.. அமித்ஷா கடும் குற்றச்சாட்டு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் அவரது கட்சிக்கு, ஊடுருவல்காரர்கள்தான் முக்கிய வாக்கு வங்கியாக இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
பீகார் மாநிலத்தில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி நடந்ததாகவும், அப்போது அவர்களைக் கேள்வி கேட்க யாரும் இல்லை என்றும் அமித் ஷா கூறினார். 
 
வாக்கு வங்கி அரசியலுக்காக, நாட்டின் பாதுகாப்பையே காங்கிரஸ் சமரசம் செய்துகொண்டது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பயங்கரவாதிகளுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
 
பீகாரில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது, ஊடுருவல்காரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்ததை அமித் ஷா சுட்டிக்காட்டினார். ராகுல் காந்திக்கும் அவரது கட்சிக்கும் ஊடுருவல்காரர்கள்தான் முக்கிய வாக்கு வங்கியாக இருப்பதால், இந்த விவகாரம் அவர்களுக்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமித் ஷா குற்றம் சாட்டினார்.
 
Edited by Siva