வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 9 அக்டோபர் 2019 (16:20 IST)

அம்பேத்கர் சிலை உடைப்பு.. மக்கள் கொந்தளிப்பு

உத்தரபிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

கடந்த 60 வருடங்களாக சாதி வெறி கும்பலால் இந்தியா முழுவதும் அம்பேதகர் சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றன. அம்பேத்கர் பட்டியலின ஜாதிகளின் தலைவர் என போலியான பிம்பம் சமூகத்தில் இருப்பதால், பட்டியலின மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மோதல் வரும்போது, அம்பேத்கர் சிலைகள் தாக்கப்படுகின்றன.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள அமைந்துள்ள திகை என்னும் கிராமத்தில், அம்பேத்கர் சிலை ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், பின்பு சிலை சரிசெய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது. மேலும் சிலையை உடைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு அப்பகுதியில் உள்ள தலித் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.