வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 17 மார்ச் 2016 (15:56 IST)

அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களை ஏமாற்றிய கில்லாடி மாணவர்கள்

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களை நூதன முறையில் ஏமாற்றிய இரண்டு கில்லாடி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 

 
பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களான பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களில், ஹைதராபாத்தைச் சேர்ந்த யஹ்யா முகமது மற்றும் முகமது அன்சாரி ஆகிய இரண்டு கல்லூரி மாணவர்கள் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் ஆகிய விலையுர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களை ஆர்டர் செய்வார்கள்.
 
அதன்படி, அவர்கள் ஆர்டர் செய்த பொருட்கள் அவர்களிட அந்த நிறுவன ஊழியர்கள் அவர்களின் அறைக்கு வரும்போது, பொருளை ஒருவர் வாங்க மற்றொருவர் அந்த ஊழியரிடம் பேச்சுக்  கொடுப்பது வழக்கம்.
 
அந்நேரம், பார்சலை வாங்கிக்கொண்டு அறைக்குள் சென்று பார்சலை பிரித்து அதில் இருக்கும் பொருட்களை எடுத்துக்கொண்டு அதற்குப் பதிலாக மணல் உள்ளிட்ட பொருட்களால் அதை நிரப்பி, பார்சலை பிரித்தது தெரியாதவாறு மீண்டும் சீல் வைத்துவிடுவாராம்
 
இதைத் தொடர்ந்து, காலாவதியான கிரடிட் கார்டை கொண்டுவந்து, ஊழியரிடம் கொடுப்பாராம். அந்த அட்டையை மெஷினில் தேய்க்கும் போது நிராகரிக்கப்படும்.
 
பின்னர், தங்களிடம் பணம் இல்லை என்றும் கிரடிட் கார்டு மட்டும்தான் இருக்கிறது என்றும் கூறி பார்சலை திருப்பி கொடுத்துவிடுவார்களாம்.
 
இது போன்று கடந்த 4 மாதங்களாக 3 விலையுயர்ந்த போன்கள் உட்பட பல்வேறு மின்சாதனங்களை மோசடி செய்து பெற்றுள்ளனர்.
 
இது குறித்து பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் காவல்துறையினரிடம் கொடுத்த புகாரையடுத்து, அந்த கில்லாடி மாணவர்கள் இருவரையும் ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
அத்துடன், அவர்களிடமிருந்து ஏராளமான எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.