செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 மே 2025 (11:08 IST)

வேலையை விட்டு போ, இல்லையேல்.. மிரட்டிய அமேசான் HR.. நெட்டிசன்கள் ரியாக்சன்..!

jobs
அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவன் சமீபத்தில், “Amazon is laying me off” என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதி, தனது மேலாளர், “அடுத்த சில நாளில் உன்னை வேலையை விட்டு விலக்கப் போகிறோம்” என்று கூறிய பின்னர் ஏற்பட்ட மன அழுத்தத்தை பகிர்ந்துள்ளார். Level 3 இன்ஜினியராக பணியாற்றும் அவர், “எனது மேலாளர், இன்று நீங்களாகவே வேலையில் இருந்து விலக வேண்டும், இல்லையெனில் ஒரு வாரத்திற்குள் நாங்களே நீக்கிவிடுவோம் என்று HR மிரட்டினார் என பதிவில் கூறுகிறார்.
 
வேலையை விட்டு சென்றால் இழப்பீடு தருவதாக மேலாளர் உறுதியளித்தாலும், மே மாதத்தில் கிடைக்கும் ஆண்டு போனஸ் குறித்த கவலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
 
மேலும் தன்னுடன் பண்புரியும் ஒரு நண்பர், “வேலையை விட்டுவிடு  என்று எச்சரித்ததாகவும், “இல்லை என்றால் பிளாக் லிஸ்ட் வருவாய் என மேலாளர் மிரட்டியதாகவும் கூறினார்.
 
இந்த பதிவு பலர் கவனத்தை பெற்றது. சிலர் ராஜிநாமா செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தாலும், பலர் அதற்கே எதிராக, “ராஜினாமா செய்தால் நிச்சயம் இழப்பீடு எல்லாம் கிடைக்காது, மேலாளர் நிறுவனத்தின் பணத்தை சேமிக்கவே இதை செய்கிறார்” என்று எச்சரித்தனர்.
 
இன்னொரு பேர், “தயவு செய்து ராஜிநாமா செய்யாதீர்கள். இது சரியான  முறையல்ல. விடுமுறை எடுத்து வேறு வேலை தேடுங்கள், ஆனால் பதவியை விட்டு விலகாதீர்கள்” என்றார்.
 
இதேபோல், சிலர் “ வேறு நல்ல வேலை விரைவில் பெற வாழ்த்துகள்; F&F எனும் முறையில் மூன்று மாத ஊதியம் பெறுவதாக உங்கள் தனிப்பட்ட மின்னஞ்சலில் உறுதிப்படுத்துங்கள்” என்றும் கூறினர்.
 
மொத்தமாக, பலரும் இந்த  பயனாளிக்கு “ராஜினாமா செய்யாதீர்கள்” என ஒரே வார்த்தையில் எச்சரிக்கின்றனர்.
 
Edited by Mahendran