வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : திங்கள், 21 செப்டம்பர் 2015 (11:23 IST)

நண்பர் என்ற முறையில் விஜயகாந்தை சந்தித்தேன் - சுப்பிரமணியன் சுவாமி

நண்பர் என்ற முறையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தேன் என்றும் அப்பொழுது, கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


 


டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்பொழுது கூறுகையில், "நண்பர் என்ற முறையில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை சந்தித்தேன். அப்பொழுது கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், பீகார் சட்டமன்றத் தேர்தல் பணயில் பாஜக உள்ளதாகவும், தேர்தல் முடிந்த பின்னர் தமிழக கூட்டணி குறித்து இறுதி முடிவு பாஜக எடுக்கப்படும் என்று கூறினார்.
 
இலங்கையில் சர்வதேச விசாரணை குறித்து தமிழக அரசு சட்ட மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை எனக் கூறிய சுப்பிரமணியன் சுவாமி, வெளிநாட்டுக் கொள்கைகளில் தலையிடும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என குறிப்பிட்டார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவை சந்தித்தபோது, இலங்கையில் சர்வதேச விசாரணை எதுவும் தேவையில்லை என அங்குள்ள தமிழ் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கூறியுள்ளன. மேலும், உள்நாட்டு விசாரணை குழுவில் அயல் நாட்டினர் இடம் பெறலாம் என்று எனக்கு ஆலோசனை தெரிவித்தார். என்று அப்போது சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.