தற்கொலை செய்து கொண்ட நடிகரின் காதலி மர்ம மரணம்


Murugan| Last Modified செவ்வாய், 3 மே 2016 (13:36 IST)
சொந்தமாக படம் தயாரித்து மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட மலையாள நடிகர் அஜய் கிருஷ்ணனின் காதலியும் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் மலையாள சினிமா உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

 

 
கேரள மாநிலம், கொல்லம் பகுதியில் வசிப்பவர் அஜய் கிருஷ்ணன்(28). அவர் சில தொலைக்காட்சி சீரியல்களிலும், நடிகர் பிருத்திவிராஜ் நடித்த மெம்மரீஸ், சீன் 1 நம்முடைய வீடு உள்பட சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
 
சினிமா தயாரிப்பாளராக மாறிய அவர், நடிகர் ஆஸிப் அலியை வைத்து “அவருடே ராவுகள்” என்ற படத்தை தயாரித்து வந்தார். இதுதான் அவரின் முதல் படம். அந்த படத்தில் சில முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். ரூ.4 கோடி செலவு செய்து அஜய் அந்த படத்தை எடுத்திருந்தார்.
 
அந்த படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் அனைத்து வேலைகளும் முடிந்து, படம் வெளிவர தயாரானது. 
 
சில நாட்களுக்கு முன்பு, அந்த படம் அவருக்கு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு அந்த படம் திருப்தியளிக்கவில்லை என்று தெரிகிறது. இவ்வளவு செலவு செய்து எடுத்த படம், எங்கே தோல்வி அடைந்து விடுமோ என்று அவர் மன உளைச்சலில் இருந்த அவர் சில நாட்களுக்கு முன்பு, தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


 

 
இந்நிலையில், அவரின் காதலியும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 
 
அஜய் கிருஷ்ணனின் காதலி வினிதா நாயர் பெங்களூரில் பேஷன் டிசைன் படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவருக்கு அஜயுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
 
அந்நிலையில், அஜய் திடீரென தற்கொலை செய்து கொண்டதில் மன உளைச்சலில் இருந்த அவர், அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :