வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Reporter - Posted by Dinesh
Last Updated : ஞாயிறு, 31 ஜூலை 2016 (19:01 IST)

பா.ம.க, தி.மு.க வை கலாய்த்த அ.தி.மு.ககாரர்

பா.ம.க, தி.மு.க வை கலாய்த்த அ.தி.மு.ககாரர்

மாற்றம் முன்னேற்றம் என்றார்கள்., முடியட்டும் விடியட்டும் என்று சொன்னார்கள் எது விடிந்தது எது முடிந்தது தெரியவில்லை – பா.ம.க டூ தி.மு.க வை கரூர் பொதுக்கூட்டத்தில் வசைபாடி, சாடிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.


 

மிழக சட்டசபை தேர்தல் முடிந்ததையடுத்து மீண்டும் அ.தி.மு.க ஆட்சியமைத்தது. இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்தும், நிதிநிலை அறிக்கை குறித்தும் அ.தி.மு.க சார்பில் ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் முதன்முறையாக கரூர் நகர அ.தி.மு.க சார்பில் 2016-17 ஆம் ஆண்டின் நிதி நிலை அறிக்கை குறித்த பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் கரூரில் நடைபெற்றது. கரூர் நகர காவல்நிலையத்தின் அருகே சுபாஸ் சிலை அருகிலேயே நடைபெற்ற இந்த பொது கூட்டத்திற்கு கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.

மேலும் இக்கூட்டத்தில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அப்போது பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் எம்.எல்.ஏ வும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழக அளவில் ஏழை, எளிய மக்களுக்கு பயனுள்ள பட்ஜெட் என்பதை விட இந்திய அளவில் மிகவும் பயனுள்ள பட்ஜெட் ஆகும், தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் என்றார். மேலும் தமிழுக்காக ரூ 32.97 கோடியை ஒதுக்கியவர் தமிழக முதல்வர் என்றும், 32 ஆண்டுகளுக்கு பின்பும் ஆளுகின்ற திறமை வாய்ந்த இயக்கம், முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தான் என்றால் அது மிகையாகாது என்றார். முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை கூறினால் சொல்லிக் கொண்டே போகலாம்., சென்ற தேர்தலின் போது கூறினார்கள்., ஒருவர் சொன்னார், மாற்றம் முன்னேற்றம் என்றார் அவர் தற்போது இருக்கும் இடம் தெரியவில்லை என்றார். மேலும் இன்னொருவர் சொன்னார் விடியட்டும், முடியட்டும் என்றார் ஆனால் எது விடிந்தது எது முடிந்தது தெரியவில்லை என்றார்.

ஆனால் இதய தெய்வம் புரட்சித்தலைவி சொன்னார் மக்களால் நான் மக்களுக்காக நான் என்றார். தமிழக மக்கள் தெரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்திய துணை கண்டத்திலேயே மாபெரும் ஒரு புரட்சி இயக்கம் இதய தெய்வம் புரட்சித்தலைவியின் கூட்டணிக்கு அழைந்தார்கள். சிங்கம் சிங்கிலா தான் வரும், அது போல சரித்திர வெற்றி பெற்று சரித்தரத்தில் ஒரு இடம் பெற்றார். மேலும் மைனாரிட்டி தி.மு.க ஆட்சி கடந்த முறை அம்மா கையில், கொடுத்த போது தமிழகம் இருளில் மூழ்கியது. தற்போது முதல்வர் ஜெயலலிதா மின்மிகை மாநிலமாக இந்திய அளவில் திகழ்கின்றது என்றார்.