வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 10 மார்ச் 2015 (13:25 IST)

மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு; 20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியிட்டது ரிசர்வ் வங்கி

20 ஆண்டுகளுக்கு பிறகு ரிசர்வ் வங்கி மீண்டும் புதிய ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிடுகிறது.
 
1994ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி ரூபாயின் மதிப்பை விட உற்பத்தி செலவு அதிகரித்ததால், ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை  நிறுத்தியது. அதுபோல, 1995ஆம் ஆண்டு முதல் 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியையும்  நிறுத்தியது.
 

 
இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு, புதிய ஒரு ரூபாய் நோட்டு அச்சிட்டு வெளியிட்டுள்ளது. மற்ற நோட்டுகளில், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து இருக்கும். ஆனால், இந்த நோட்டில் மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் மெரிஷியின் கையெழுத்து இரு மொழிகளில் இடம் பெற்றுள்ளது.
 
இந்த புதிய நோட்டுகளை ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீநாத்ஜி கோவிலில் மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் மெரிஷி வெளியிட்டார். புதிய நோட்டுடன், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பழைய ஒரு ரூபாய் நோட்டுகளும் செல்லுபடு ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.