தொடர்புடைய செய்திகள்
- ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான டிவி மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்.. அவதூறு செய்தியா?
- பீகாருக்கு ரூ.13 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள்! தேர்தலையொட்டி வாரி வழங்கிய மோடி!
- நடிகைகளை அடுத்து திருநங்கை பாலியல் புகார்.. கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு மேலும் சிக்கல்..!
- ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான மாணவன் தற்கொலை.. மசோதா நிறைவேறிய அடுத்த நாளே சோக சம்பவம்..!
- தெருக்களில் நாய்களை விடலாம், ஆனால்.. உச்சநீதிமன்றம் பிறப்பித்த 5 நிபந்தனைகள்..!
அடிபொலி.. கேரளாவுக்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி! - கொண்டாட்டத்தில் சேட்டன்ஸ்!
பிரபல அர்ஜெண்டினா கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி கேரளாவிற்கு வருவது உறுதியாகியுள்ளது
இந்தியா முழுவதுமே ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் இருந்தாலும், கால்பந்து என்றால் அதற்கு ரசிகப்பட்டாளமே கேரளாதான். பிஃபா கால்பந்து நடக்கும்போதெல்லாம் கேரளாவில் திருவிழாதான். அப்படியாக கேரளாவில் மெஸ்ஸி, ரொனால்டோ என கால்பந்து ஜாம்பவான்களுக்கு என ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.
இந்நிலையில் வரும் நவம்பரில் அர்ஜெண்டினா கால்பந்து அணி கேரளாவில் விளையாட உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியும் கேரளா வருவது உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த கேரளாவுமே மெஸ்ஸியை வரவேற்க கோலாகலமாக தயாராகி வருகிறது.
Edit by Prasanth.K
