திருநங்கைக்கு புதிய பிரியாணி கடை வைத்துக்கொடுத்து உதவிய முன்னணி நடிகர்

jayasurya
Sinoj| Last Updated: சனி, 17 அக்டோபர் 2020 (17:30 IST)

கேரளா மாநிலம் கொச்சியில் ஷாதி என்ற திருநங்கை ஒரு பிரியாணி கடை நடத்தி வந்தார். இவரது கடையை சில நபர்கள் அவரைக் கடை நடத்த விடாமல் தொல்லைத் தந்ததுடன் அவரைத் தாக்கிவிட்டு கடையையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கேரள மாநில அமைச்சர் கே.கே சைலஜா சஞ்சனா ஷாதிக்கு நிவாரணம் அளிப்பதாகவும் , அவரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

இந்நிலையில், மலையாள நடிகர் ஜெயசூர்யா திருநங்கை சைலஜாவுக்கு தனி ஒரு பிரியாணி கடை வைட்துக் கொடுத்து உதவியுள்ளார்.

இதற்கு பலரும் ஜெயசூர்யாவைப் பாராட்டி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் அவரது நடிப்பில் ஞான் மேரிக்குட்டி என்ற படத்தில் வெளியானது. அப்படத்தில் அவர் திருநங்கை வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :