வெளிநாடு வாழ் பிரதமராக மோடி: காங்கிரஸ் கட்சி கேலி


K.N.vadivel| Last Updated: வெள்ளி, 25 செப்டம்பர் 2015 (05:27 IST)
வெளிநாடு வாழ் பிரதமராக மோடி உள்ளார் என காங்கிரஸ் கட்சி கேலி செய்துள்ளது.
 
 
இது குறித்து, காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று பதினைந்து மாதங்களில் 29 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதனால், நாட்டுக்கு என்ன நன்மை நடைபெற்றுள்ளது என்ற  கேள்வி எழுந்துள்ளது.
 
மக்கள் பணத்தில் இருநூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்து, இந்தப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். அவர் கூறியது போல, எந்தெந்த நாடுகள் இந்தியாவில் எத்தனை கோடிகளில் முதலீடு செய்துள்ளன? என்பதை தெரிவிக்க வேண்டும்.
 
மேலும், ஜப்பான், சீனா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணித்த மோடி, செல்பி எடுத்து, தன்னை விளப்பரப்படுத்திக் கொள்வதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தார்.
 
மோடி, பிரதமராக பதவியேற்ற பின்பு, 15 மாதங்களில் மோடி மூன்றரை மாதங்கள் வெளிநாடுகளில் மட்டுமே கழித்துள்ளார் என்றார்.
 


இதில் மேலும் படிக்கவும் :