வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள்: ஆர்எஸ்எஸ் தலைவர்


Suresh| Last Updated: வெள்ளி, 15 ஜனவரி 2016 (09:02 IST)
வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

 

 
இது குறித்து மோகன் பாகவத் கூறியதாவது:-
 
நாம் அனைவரும் இந்துக்கள்தான். நாட்டிற்குள் பன்முகத்தன்மை நிலவினாலும், வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.
 
இந்தியாவைத் தவிர, உலகில் வேறெந்த நாட்டிலும் உலக மக்கள் அனைவரையும் தங்கள் சொந்தம்போல் கருதுவோர் இல்லை.
 
உலகப் பிரச்னைகள் அனைத்துக்கும் இந்தியாவால் தீர்வு சொல்ல முடியும். நமது நாட்டில், அனைத்து மதங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
 
இணைந்து வாழ்வதற்கு ஒத்த கருத்து கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இங்கு இல்லை. என்று மோகன் பாகவத் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :