1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 29 ஜூலை 2015 (01:24 IST)

அப்துல்கலாம் டிவிட்டர் பக்கம் வழக்கம் போல் இயங்கும்

முன்னாள்  ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்தாலும்,  அவரது டிவிட்டர் பக்கம் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் டிவிட்டர் சமூக இணையதளத்தை முறையாக பயன்படுத்தி வந்தார். அதில், தனது நிகழச்சிகள், கருத்துகள் போன்றவற்றை பதிவு செய்து வந்தார். மேலும், மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். இவரை 14 லட்சம் பேர் டிவிட்டர் பக்கத்தில் பின்தொடர்ந்தனர்.
 
இது குறித்து, அப்துல்கலாமின் உதவியாளர் ஸ்ரீஜான்  பால் சிங் கூறுகையில், அப்துல் கலாம் மறைந்துவிட்டாலும், அவரது  டிவிட்டர் பக்கம் வழக்கம் போல் இயங்கும்.  அவரது  டிவிட்டரில் , அவரது நினைவுகள், எண்ணங்கள்,  கொள்கைகள், கனவுகள், பேச்சுகள், அக்னி  சிறகுகள், இந்தியா 2020 உள்ளிட்ட அவரது புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகள் போன்றவை பதிவு செய்யப்படும் என்றார்.