வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 12 மார்ச் 2016 (01:03 IST)

மக்களே... இனிமேல் ஆதார் எண் கட்டாயம்

மக்களே... இனிமேல் ஆதார் எண் கட்டாயம்

ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.
 

 
இந்தியாவில், பொது மக்களுக்கு ஆதார் எண் வழங்கும் முறையை கடந்த காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்தது. அப்போது, இந்த முறைக்கு பாஜக கடும் ஆட்சேபம் தெரிவித்தது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, ஆதார் எண் கட்டாயம் என பாஜக அரசு கூறிவந்தது.
 
இதனையடுத்து, ஆதார் எண்ணுக்கு சட்ட அந்தஸ்து வழங்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது.
 
இந்த நிலையில்,ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதாவை நிதியமைச்சர் அருண் ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதா மிகவும் எளிதாக நிறைவேற்றப்பட்டது.
 
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது குறிப்பிடதக்து.