விலங்கு போல் தலையில் கொம்பு முளைத்த மனிதர்... வைரலாகும் போட்டோ

shyam
sinojkiyan| Last Updated: திங்கள், 16 செப்டம்பர் 2019 (21:03 IST)
உனக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு என யாரையாவது பார்த்துக் கோபத்தில் கேட்பது நமது வழக்கம். மிருகங்களுக்கு கொம்பு முளைத்து பார்த்திருப்போம் ! ஆனால் தலையில் கொம்பு முளைத்த மனிதனை இப்போது பார்க்கப்போகிறோம்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷாம்( 740. இவருக்கு சிறுவதில் தலைவர் ஒரு காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அப்போழுதே அதற்காக சிகிச்சை பெற்றுவிட்டார்.  இந்த காயத்தை சரிசெய்ய அவர் நாட்டு வைத்தியம் அல்லோபதி எனப் பலதரப்பட்ட சிகிச்சைகளை எடுத்து எப்படியோ சரிசெய்துவிட்டார்.
 
இந்நிலையில் அவரது தலையில், லேசாக புடைப்பது போன்ற கொஞ்சம் சதை வளர்ந்துள்ளது. அது நாளாக ஆக வளர்ந்து 5 இன்ச் அளவுக்கு வளர்ந்து கொம்பு போன்று ஆகிவிட்டது. தலைக்கு மேல் என்பதால் எந்தவித சிரமுமின்றி அந்தக் கொம்பு வளர்ந்து கொண்டே சென்றுள்ளது.
shyam

இதனால் பெரும் சிரமப்பட்ட ஷாம், சமீபத்தில், மருத்துவர்களிடம் இது குறித்துக் கேட்டுள்ளார்.அவர்கள், இது 'ஷெபேசியஸ் கார்ன் 'எனக் கூறியுள்ளனர்.

பின்னர்   மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்து, ஷாமின் மண்டை ஓட்டுக்குள் இருந்த அந்தக் கொம்பின் வேரைக் கண்டுபிடித்து வெட்டி எடுத்துள்ளனர். தற்போது, ஷாம் இந்தக் கொம்பின் பிரச்சனை இன்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இதில் மேலும் படிக்கவும் :