டெல்லியில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா​

delhi corona
டெல்லியில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா​
Last Updated: திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (19:57 IST)
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது
இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் இன்று புதிதாக 805 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இன்று மட்டும் 805 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் 937 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும், 17 பேர் இன்று கொரோனாவால் பலியாகி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் டெல்லியில் கொரோனாவால் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,38,482 என்றும், மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 4,021 பேர் என்றும், இதுவரை 1,24,254 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், இன்றைய தேதியில் 10,207 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மட்டும் 10,133 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 10,73,802 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் டெல்லி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது


இதில் மேலும் படிக்கவும் :