தொடர்புடைய செய்திகள்
- 10 மாத குழந்தையின் தாயை நடுரோட்டில் தாக்கிய கும்பல்.. பணம், நகையை எடுத்து கொள்ளுங்கள் என கெஞ்சிய கொடுமை...
- கணவரை கொன்று புதைத்து காதலுடன் ஜாலி!. வசமாக சிக்கிய பெண்!...
- வயநாட்டில் நிலச்சரிவு!. 5 பேர் பலி!.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...
- புனே தொழிலதிபர் கொலை!.. ரகசிய திருமணம் செய்து கொண்ட சியா கோயல் - சேத்தன் சவுத்ரி!..
- கள்ளக்காதல் விவகாரம்!. 11 வயது குழந்தையை அடித்து கொலை செய்த பெற்றோர்!..
30 வருடங்களாக 300 நட்சத்திர ஹோட்டல்களில் ஏமாற்றிய தமிழ்நாட்டை சேர்ந்த 69 வயது முதியவர்.. ஒடிசாவில் கைது
இந்தியாவிலுள்ள 300-க்கும் மேற்பட்ட சொகுசு நட்சத்திர ஹோட்டல்களில் கடந்த 30 வருடங்களாக போலி அடையாளங்களை பயன்படுத்தி தங்கி, பில் கட்டாமல் ஏமாற்றி வந்த தமிழ்நாட்டை சேர்ந்த 69 வயது முதியவரான பின்க்சன் ஜான் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர் வெளிநாட்டு சுற்றுலா வழிகாட்டி, யோகா மாஸ்டர் அல்லது ஆங்கில ஆசிரியர் என போலியாக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். சமீபத்தில் ராய்ப்பூரிலுள்ள ஹயாத் ஹோட்டலில் தங்கி, ரூ.63,755 பில் தொகையை செலுத்தாமல், அங்கிருந்த ரூ.1.48 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்பையும் திருடி சென்றுள்ளார். ஹோட்டல் நிர்வாகத்தின் புகாரை தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஒடிசாவின் புவனேஸ்வரில் இவரை கைது செய்து லேப்டாப்பை மீட்டனர்.
விசாரணையில், இவர் 1990 முதல் நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட சொகுசு ஹோட்டல்களை இதே பாணியில் ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார். 1980-களில் டெல்லியில் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தபோது ஒரு ஹோட்டல் ஊழியர்களால் அவமதிக்கப்பட்டதால், சொகுசு ஹோட்டல்களை பழிவாங்க தொடங்கியதாக கூறியுள்ளார்.
1996-ல் முதன்முதலில் கைதாகி சிறைக்கு சென்ற இவர், அங்கு பிரபல மோசடி மன்னன் சார்லஸ் சோப்ராஜின் ஏமாற்று வித்தைகளால் ஈர்க்கப்பட்டு, அவதிப்படியே போலி அடையாளங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளார். ஏற்கனவே கேரளா, தமிழ்நாடு, கோவா உட்படப் பல மாநிலங்களில் 15 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ள இவர் மீது ராய்ப்பூர் போலீசார் தற்போது மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Edited by Siva
