இந்தியாவில் 66 சதவீத குழந்தைகளுக்கு சர்க்கரை நோய்? - அதிர்ச்சி தகவல்


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 14 நவம்பர் 2015 (11:56 IST)
இந்திய குழந்தைகளில் 66 விழுக்காட்டினருக்கு சர்க்கரை நோய் உள்ளதாக எஸ்ஆர்எல் என்ற தனியார் மருத்துவ நிறுவனத்தின் ஆய்வு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
 
 
உலக நீரிழிவு நோய் நாளை முன்னிட்டு நாடு முழுவதும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
 
இந்த ஆய்வறிக்கையில், துரிதமான நகரமயமாதல் மற்றும் வாழ்க்கை முறை மாறி வருவதும் சர்க்கரை நோயை மக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளது. உணவுப்பழக்கங்களில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
 
வெளிப்புறங்களில் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் வீட்டிலிருந்தோ அல்லது அலுவலகத்திலிருந்தோ உட்கார்ந்த நிலையில் பணிபுரியும் வேலை முறை மற்றும் குழந்தைகளுக்கு கணிப்பொறி விளையாட்டுகள் தொலைக்காட்சிகள் ஆகியவற்றினால் உடல் உழைப்பு குறைந்து விட்டது.
 
இதன் விளைவாக குழந்தைகளின் உடலில் மிக அதிகமான அளவில் சர்க்கரை இருப்பதாக தெரிய வந்துள்ளது. மூன்றாண்டு கால அளவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடலில் உள்ள சர்க்கரையின் அளவில் சராசரி கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வில் இந்த முடிவுக்கு வரப்பட்டுள்ளது.
 

 
இந்த ஆய்வுக்காக 17 ஆயிரம் இந்திய குழந்தைகளின் ரத்தம் பரிசோதனைக் கூட ஆய்வுக்காக மாதிரிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டது. எடுத்து கொள்ளப்பட்ட ஆய்வு மாதிரிகளில் 51.76 விழுக்காடு மாதிரிகளின் இரத்த அளவில் மிக அதிகமான சர்க்கரை அளவு இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
 
இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்பது தொற்று நோய் அல்ல, ஆனால் அமைதியான முறையில் பரவிவரும் தொற்று அல்லாத நோயாகும்.
 
வரும் 2015ஆம் ஆண்டிற்குள் வளரும் நாடுகளில் 80 விழுக்காடு புதிய சர்க்கரை நோயாளிகள் உருவாகி இருப்பர். கடந்த 2012இல் உலக அளவில் 15 லட்சம் மரணங்கள் நேரடியாக சர்க்கரை நோயால்தான் நிகழ்ந்துள்ளன.
 
நடுத்தர மற்றும் குறைவான வரு மானம் உள்ள நாடுகளில் 80 விழுக்காட்டிற்கும் மேலான மரணங்கள் சர்க்கரை நோயால்தான் நிகழ்ந்துள்ளன. வரும் 2030ல் சர்க்கரை நோய்தான் மரணத்திற்காக 7 ஆவது காரணமாக இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
 
நவம்பர் 14ஆம் தேதியான இன்று உலகநீரிழிவு நோய் தினமாக கடை பிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :