பாலியல் பலாத்கார சம்பவங்களைக் கண்டித்து பெங்களூரில் முழு அடைப்பு

Suresh| Last Modified வியாழன், 31 ஜூலை 2014 (10:33 IST)
பாலியல் பலாத்கார சம்பவங்களைக் கண்டித்து, பெங்களூரில் முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெண்கள், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதைக் கண்டித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் நகர் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்தைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :