1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. 48-Year-Old Man Dies After Altercation Over Metro Seat in Delhi, Former IAS Officer and Son Arrested

மெட்ரோவில் 48 வயது நபரை தள்ளிவிட்டதில் மரணம்.. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், மகனும் கைது..

டெல்லி மெட்ரோ
டெல்லி மெட்ரோ ரயிலில் முதியோர்களுக்கான இருக்கை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், 48 வயது நபர் தாக்கி தள்ளப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அக்டோபர் 8 அன்று உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த பவன் சர்மா என்பவருக்கும், சஞ்சய் பிரதாப் சிங் மற்றும் அவரது மகனும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான சிப்பார்த் சிங் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பவன் சர்மா கன்னத்தில் அறையப்பட்டு தள்ளப்பட்டதில், கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்துள்ளார்.
 
மெட்ரோ பணியாளர்கள் அவரை மீட்டு லோக் நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சர்மாவின் தாயார் துர்கா சர்மாவின் புகாரின் பேரில் அக்டோபர் 9 அன்று பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 105 மற்றும் 3(5)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
முக்கிய குற்றவாளியான சஞ்சய் பிரதாப் சிங் ஏற்கனவே லஞ்ச வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
உங்களை மாதிரி விஜய் இல்லை!.. திமுகவுக்கு திருமாவளவன் பதிலடி!..